கடலூர், செப்டம்பர் 22 | புரட்டாசி 06:
பாஜக மோடி அரசின் தேர்தல் ஆணையத்தின் வாக்குத் திருட்டை கண்டித்து, கடலூர் மத்திய மாவட்ட காங்கிரஸ் சார்பில் கையெழுத்து இயக்கம் மஞ்சக்குப்பம் தபால் நிலையம் எதிரில் துவங்கப்பட்டது. மாவட்ட தலைவர் திலகர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியை கடலூர் பாராளுமன்ற உறுப்பினர் விஷ்ணு பிரசாத் கலந்து கொண்டு கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பேசிய விஷ்ணு பிரசாத், “மோடி அரசு தமிழகத்தில் எவ்வித சூழ்ச்சிகளையும் நிகழ்த்தினாலும், அது மக்களிடம் பலிக்காது. அனைத்து மக்களும் வாக்கு திருட்டுக்கு எதிராக குரல் எழுப்ப வேண்டும்” எனக் குறிப்பிட்டார். இந்நிகழ்ச்சியில் நகர தலைவர் வேலுச்சாமி, ரங்கமணி, ரவிச்சந்திரன், குமார் உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள், மாவட்ட, நகர, வட்டார தலைவர்கள் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment